திருக்குறள் -சிறப்புரை
:1029
இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.----- ௧0௨௮
தன்குடிப்பெருமை தாழ்வுறத் தேடிவரும் இடையூறுகளைத் தடூத்துநிறுத்திக்
காப்பதால் அவனுடைய உடம்பு துன்பங்கள் நிறையும் கொள்கலனாகியதோ..?
“குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல.”
–புறநானூறு.
குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள்: உடையோர்
பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும், கோல் செங்கோலாகவும், உரிய இறைப் பொருளுண்டு
நடுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய்
வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக