புதன், 3 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1009


திருக்குறள் -சிறப்புரை :1009

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.--- ௧00௯

எவரிடத்தும் அன்புகொள்ளாது, தன்னை மிகவும் வருத்தி, ஈதலாகிய அறத்தை மறந்து ஈட்டிய பெரும்பொருளைப் பிறர் கொண்டுபோய் பயன் அடைவர்.

“செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ.’ –கலித்தொகை.

அறவழியிலிருந்து மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் வாழுங்காலத்தும் இறந்தபின்னும் பகையாகி அழிவைத்தரும் என்ற உண்மையை அறியாயோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக