செவ்வாய், 2 அக்டோபர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -96

மெய்ப்பொருள் காண்பது அறிவு -96
அரிசுடாட்டில் (Aristotle-…..
மனித வாழ்க்கை
மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்வின் குறிக்கோள். அஞ்சி ஒடுங்கும் கோழைத்தனம் ஓர் இறுதி நிலை ; அஞ்சுதற்கு அஞ்சாமலிருப்பது இன்னொரு இறுதி நிலை. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையே ஏற்புடைய வாழ்க்கை.
பெண்கள்
 பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் ; இது இயற்கையானது. 30 வயது ஆண் 20 வயது பெண்ணை மணந்தால் அவர்களுடைய பாலுணர்வு ஒத்த நிலை உடையதாகவும் ஒரே காலத்தில் நிறைவு பெறுவதாகவும் இருக்கும்.
கல்வி
கல்வி அரசுதான் கொடுக்க வேண்டும். சிறந்த குடிமகனுக்கு ஆணையிடவும் தெரிய வேண்டும் ; ஆணைக்கு பணிந்து நடக்கவும் தெரிய வேண்டும்.
சமுக அமைப்பு
சமுதாயத்தோடு இணங்கி வாழத் தெரியாதவன் விலங்கு. மொழியால் சமுதாயமும் சமுதாயத்தால் அறிவும் அறிவால் ஒழுங்கும் ஒழுங்கால் நாகரிகமும் விளைகின்றன.
 இவர் சமுகப்புரட்சியை வெறுக்கிறார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்த்தால் சமுதாயத்தில் அமைதி ஏற்படும் என்கிறார்.
 அரிசுடாட்டிலின் இறுதிக் காலம் துன்பம் நிறைந்ததாக இருந்தது. ஏதென்சை விட்டு வெளியேறி மனம் நொந்து நஞ்சுண்டு இறந்தார். கிரேக்க நாட்டின் தத்துவப் பூங்காக்கள் சிந்தனை நீரின்றி வறட்சியால் பட்டுப்போயின.” 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக