வியாழன், 4 அக்டோபர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -98

மெய்ப்பொருள் காண்பது அறிவு -98
தெக்கார்த் (Rene Descartes) கி.பி. 1596 – 1650
தற்காலத் தத்துவத்தின் தந்தை
பிரான்சு நாட்டவர்.  தனிமை விரும்பி – இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருப்பார் – இறந்தபின்னும் இவர் உடல் இடம் விட்டு இடம் மாற்றப்பட்டது.
நூல்கள்
இவரெழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை மூன்று.
1.  சிந்தனை முறை பற்றிய உரையாடல்கள்
2.  தத்துவத்தின் அடிப்படைகள்
3.  தத்துவ அடிப்படை பற்றிய சிந்தனைகள்
ஐயமே அறிவுக்கு வழி
கல்வி அறிவுக்கு அடிப்படை – கல்வித்துறை –கற்பிக்கும் முறை ஆகியவை குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.
பழைய இலக்கியக் கல்வி கற்பனை வாழ்வில் தள்ளி விடுகிறது.
புராணச் செய்திகள் சிந்திக்கும் ஆற்றலைஅழித்துவிடுகின்றன.
 மனிதன் சிந்தனையின் பயனாக அறிவைப் பெற வேண்டும்.
கணக்கியல் சிந்தனையில் தொடங்கி நிரூபணத்தில் முடிகிறது.
சகல அறிவியல் துறைகளுக்கும் கணக்கியலே அடிப்படை.
 சிந்தனைகள்
1.  மன உள்ளாற்றல் கொண்டு சிந்திப்பது
2.   மன உள்ளாற்றல் மூலம் அறிந்துகொண்ட உண்மைகளில் இருந்து பகுப்பளவைச் சிந்தனை மூலம் புதிய உண்மைகளை வெளிக்கொணர்வது.
மனமே – அறிவுக்கு அடிப்படை
ஐயம் – தொடக்கம் மட்டுமே முடிவன்று.
ஐயப்பாடு என்பது ஓர் ஆய்வுநெறி.
“நான் சிந்திக்கிறேன் ; எனவே நான் இருக்கிறேன்” – இவர் முடிபு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக