திருக்குறள் -சிறப்புரை
:1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.----- ௧0௩௪
நெற்கதிர்களாலான குடைநிழலில் வாழும் உழவர்கள், பல அரசர்களின் குடையின்
கீழ் அடங்கிய நிலப்பரப்பை எல்லாம் தம் மன்னனின் குடை நிழலில் தங்குமாறு செய்யும் ஆற்றல்
வாய்ந்தவர்களே உழவர்கள்.
“புனிறு தீர் குழவிக்கு
இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல்
மலி நீர்
மன்பதை புரக்கும் நல் நாட்டுப்
பொருநன்.” –புறநானூறு.
பிள்ளை ஈன்று பல திங்கள் செல்லினும் பால் சுரக்கும் தாயின் மார்பு போல,
மிகுதியான நீர் கரையின் மரங்களைச் சாய்க்குமளவு பெருகிய வெள்ளத்தை உடைய காவிரி, உலக
உயிர்களைக் காக்கும் சோழ நாட்டிற்கு வேந்தன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக