சனி, 30 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 28.. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

சான்றோர் வாக்கு – 28.. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

 

” திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால்

கொலை முதற் பற்பல குற்றம்சுமந்த

மாசிலா மனத்து மாட சாமியும்

அன்புறு பாரதி அரவிந் தர்முதல்

வன்முறை யுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப்

பன்முறை புதுவையில் செத்துப் பிழைத்தேன்

மக்கள்நலம் காத்தல்கண்டு ஆள  வந்தார்

எக்கேடு சூழினும் அஞ்சேன் ஒருநாள்

சிறைக்கதவு திறக்கப்பட்டது ; சென்றேன்

அறைக்கதவு புனிதப் பட்டது; மீண்டேன்

புதுவை அரசியற் போரில் இறங்குவேன்

இதைவை யேன்எனில் அதைவிட்டு வையேன்.”

 

 

“For help rendered to noble Madasamy

Kind Bharathi, Sri Aurobindo and others

Who by the oppressive rulers were accused?

Of murder and many other offences,

For their part in the Freedom Struggle

By Lokamanya Tilak waged

Privations many I had suffered in Pondicherry

Whatever tribulations the rulers subjected me to.

In serving  the people’s weifare and weal,

Never afraid was I. On a day opened the prison-gates,

In I went. Sacred became the place. And on a day, out I came

Soon into the battle of Pondicherry politics I plunged

Certain always I was of my aims and actions.” -   -- -- R,Ganapathy.

 

 

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 27. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

சான்றோர் வாக்கு – 27. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்

முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும்

கட்புலம் போல என்றன் உள்ளம்

சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும்

சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும்

இளைஞர்க்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர்

ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்து

நல்லா சிரியன்மார் நல்லாசிரியைமார்

பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும்

அலுவலில் அழகுற வாழ்கின்றார்கள்

”Intently and eagerly engaged was my mind all the while

In eradicating the evils of  caste

And condemning foolish customs old

Spent was  my service in offering the young

The wealth of Tamil

To enable them Tamil teachers become

Many men and women were by me trained

Good teachers of Tamil to be,

And well do they the profession serves still. -- -- R,Ganapathy

 

வியாழன், 28 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 26. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

சான்றோர் வாக்கு – 26. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

” கடவு ளுருவம் அனைத்தையும்

தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்

காடு முழுதும் கண்டபின் கடைசியாச்

சுப்பிர மணிய பாரதி தோன்றியென்

பாட்டுக்குப் புதுமுறை, புதுநடை காட்டினார்

நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர்

தொண்டினால் அவர்க்கும் புலவர்க்கும் தோன்றும்.

 

“My heart was ever groping in search!

Sterile methods and styles old I had exhausted by then.

When Bharathi upon the scene did come in fine,\

Showing styles new and methods fresh for my poetry

His art of free-verse served I too,

To help him vanquish pundits learned and polemics literary.”-- R,Ganapathy.

 

 

புதன், 27 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 25. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

 சான்றோர் வாக்கு – 25. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

” ஆசை பற்றிய தமிழின் தொண்டில்

ஒட்டிய என் உளம் வெட்டினும் பிரியாது

வெண்பா முதலிய எழுதும் என்கை

வண்ணம்பாடிக் கொண்டிருக் கும் வாய்

முப்ப தாண்டு முடியும் வரைக்கும் நான்

எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்?

கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச்

‘சுடச்சுட அவன் அருள் துய்ப்பீர்’ என்னும்

ஆயினும்……..

 

 

“Heart and soul, devoted and determined I was

The cause of Tamil to serve.

Poems of many kinds my hand would scribe

And my lips would melodies make

What did all my writings in those thirty years convey?

Manifestations of God, keenly desirous of revealing to the people,

These would exhort them the Grace of God to imbibe

As fresh and soon. Of God’s form indeed…”…R,Ganapathy.

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 24. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

சான்றோர் வாக்கு – 24. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

”கல்வித் துறைச்செய லாளர்

பொய் இலா ராகிய ‘கையார்’ என்க

முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன்

ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன்

அலு வலில் இருந்த அத்தனை நாளிலும்

 

அறவழி தவறிய அதிகா ரிகளின்

எதிர்ப்பிலா நேரமே இல்லை. அக் கடலை

வென்று நீந்தா வேளயே இல்லை

அலுவல் கால நிலைஇது

ஆயினும்”

………………….தொடரும்……………………..

“ But the Education Secretary ,

An honest French man called Caillard ,

Rules in my favour cited, and me a teacher made at Niravi.

Years seven and thirty  I served,

And with benefits of pension retired.

In service, fierce opposition I had ever to face,

From officers unfair

Their resistance relentless,

I had always to swim against

Officialdom was at that time.”

……………………….தொடரும்…………………….

திங்கள், 25 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 23. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS.

 

சான்றோர் வாக்கு – 23. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS.

“தமிழி லக்கணம் தமிழி லக்கியம்

எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், புதுவைத்

திருப்புளி சாமி ஐயா செந்தமிழ்

இருப்பே என்னும் பங்காரு பத்தர்

புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு

பெரும்புகழ்ப் பெரியசாமிப் பிள்ளை

என்பவர் ஆவார்.

        இவர்களின் அருளினால்

பதினே ழாண்டும் பற்றா இளையேன்

நாற்பது புலவர் தேர்தலில் முதலாத்

தேர்வு பெற்றேன்.

                      காரைக்காலின்

ஒரு பகுதி யான ‘நிரவியில்’ ஓர் இடம்

ஓர்ஆ சிரியர்தேவைஎன் றதனால்

அந்த இடத்தை அடையக் கருதிப்

புலவர் பல்லோர் போட்டி இட்டனர்

யானும் பதினெட்டாண் டெய்தினேன், ஆயினும்

 

‘இளையன் ஆதலால் அவன் அவ் விடத்தை

அடைதல் ஆகா தென்றனர்’ ஆள்வோர்.

ஆயினும் நானே அதனை அடையச்

சட்டங் காட்டித் தடைகளை நீக்கி

அன்றுஎனை நிரவி ஆசிரியன் ஆக்கினார்

அவர் யார்?.” ………………..தொடரும்…………….

 

Thirupuli swamy Ayya of Pondicherry

Bangaru Pattar, Tamil savant renowned

And Periyaswamy Piilai reputed teacher of teachers,

Taught me Tamil Literature and Grammar.

 

By their kindness keen, before I was seventeen,

In scholastic Tamil Examinations, first I stood among forty.

 

At Niravi, in Karaikal, a  vacancy arose

For a teacher’s post. Competed many for the position

As eighteen years  young then I was, the officers there

Would n’t let me have the job .

……………………………………..contd……….

 

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 22. 352. பாலை, குறுந்தொகை.

 

சான்றோர் வாக்கு – 22.  352. பாலை,  குறுந்தொகை.

 

“நெடுநீர் ஆம்பல் அடைப் புறந்தன்ன

கொடுமென் சிறைய கூர் உகிர்ப் பறவை

அகல் இலைப் பலவின் சாரல் முன்னி

பகல் உறை முதுமரம் புலம்பப் போகும்

சிறுபுன் மாலை உண்மை

அறிவேன் தோழி அவர்க் காணா ஊங்கே.”

– கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

 

 

Bats with sharp claws and bent thin wings like the back of  the lily leaves  growing in deep waters, thinking of  the hill slopes abounding in jack trees with wide broad leaves leaving the aged  tree alone  where they had rested  during day fly away. The very existence of such a   paltry parting hour of eve  I become aware of only  now when my lord is away from me.”-

----R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

 

சனி, 23 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 21. 120. குறிஞ்சி, குறுந்தொகை.

 

சான்றோர் வாக்கு – 21.  120. குறிஞ்சி,  குறுந்தொகை.

 

“இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு

அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி

நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு

அரியள் ஆகுதல் அறியாதோயே.”--- பரணர்.

 

”Like  a destitute person  yearning  for the pleasure of life, O heart, you aspire for a rare object. You understand that the maid in love is good-natured, but fail to realize that she is difficult of attainment.” ----R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

 

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 20. 57. நெய்தல், குறுந்தொகை.

 

சான்றோர் வாக்கு – 20.  57. நெய்தல்,  குறுந்தொகை.

“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன

நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்

பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு

உடன் உயிர் போகுகதில்ல கடன் அறிந்து

இருவேம் ஆகிய உலகத்து

ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே” –சிறைக்குடி ஆந்தையார்.

 

“The water bird ‘ Mahandril’ lives with its mate in inseparable union. Even the obstruction of a flower between them seems years of separation for them, so also, let us two (man and wife) who have taken two different lives (of different sex) on this earth for fulfillment  of certain  duties and responsibilities (such as sexual enjoinment, helping the needy, etc.) if only to avoid the misery  of separation from each other

 

(in this and the future life) breathe our last in happy union with perpetual flow of love between us.” --R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

 

வியாழன், 21 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -157., குறுந்தொகை

 

சான்றோர் வாக்கு -157., குறுந்தொகை

“ குக்கூ’ என்றது கோழி அதன்எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.” –அள்ளூர் நன்முல்லை.

 

“The cock crows ‘kukkoo’ . At once my flawless heart is filled with fear; for dawn, deadly like the spear that tears my beloved away from me is come.”

--R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

புதன், 20 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -18.

 

                        சான்றோர் வாக்கு -18.

75 மருதம்

“நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ

வெண்கோட்டு யானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.” –படுமரத்து மோசிகீரனார்; குறுந்தொகை.

”Minstrel, Did you yourself witness my lord’s coming soon? Or did yoy hear from others who saw it? If so, from whom did you hear? May I wish to know the truth? May you get as gift  the gold-abounding  city of  Padalipuram on the banks of the Sonai, wherein the white tusked elephants plunge and bathe? Speak out ! -R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -17.

 

                        சான்றோர் வாக்கு -17.

196-மருதம்

”வேம்பின் பைங்காய் எந்தோழி தரினே

தேம்பூங் கட்டி என்றனிர் இனியே

பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

வெய்ய உவர்க்கும் என்றனிர்

ஐய! அற்றால் அன்பின் பாலே”.-மிளைக்கந்தன்,குறுந்தொகை

 

   In former days, even if mistress offered you only green unripe neem (margosa) fruit, you deemed it sweet lovely looking candy; but nowadays even if she were to offer you cool, crystal clear spring water of the cool month of Thai from Pari’s  Parambu hills, you deem it hot and saltish! O chief, such is the nature of  thy love!” - R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

திங்கள், 18 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -16.

 

சான்றோர் வாக்கு -16.

40. குறிஞ்சி

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.–செம்புலப்பெயனீரார், குறுந்தொகை.

 

      In what way were your mother and my mother related before (our first meeting) ? What relationship existed between my father and your father ? How did we come to know each other? Our loving hearts mingled one with the other (at first sight) as rain falling on reddish soil and mixing with it !”    

                                                        --  R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -15. குறுந்தொகை.

 

சான்றோர் வாக்கு -15. குறுந்தொகை.

27.பாலை.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காங்கு

எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்---

திதலை அல்குல் என் மாமைக் கவினே. –வெள்ளி வீதியார், குறுந்தொகை.

 

“ Like the sweet milk of the high bred-cow without either the calf sucking it or its 

getting into the milk bowl spilling (uselessly)  on the ground, the loveliness of my 

beauty- spotted  waist resembling the elegance of tender mango leaves, without 

being of any use either to me or to my beloved, sallow love-sickness craves to 

swallow!” --  R.Balakrishna Mudaliyar,B.A.L.T.

சனி, 16 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -14.

 

சான்றோர் வாக்கு -14.

3. குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவின்றே – சாரல்

கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. – தேவகுலத்தார், குறுந்தொகை.

 

“My beloved is the lord of the hil-country where, on its slopes, flourish the black-boughed  Kurinchi  trees , from whose flowers bees gather plenteous  honey. My attachment to him   is wider than this earth, higher than the  sky and unfathomably  deeper than the sea! “—R. Balakrishna Mudaliyar,

B.A.L.T.

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -13.

 

சான்றோர் வாக்கு -13.

“A sovereign’s great example forms a people ; the public breast is noble or vile as he inspires it.”

“ தன் குடிமக்களைத் தக்கவராக உருவாக்கி வருவதே ஒர் அரசனின் பெரிய நிலை; பொது மக்கள் மனம் மேன்மையாகவோ, கீழ்மையாகவோ இருப்பது அவன் செய்துவரும் நற்செயல்கள் அளவேயாம்.”

வியாழன், 14 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -12.

 

சான்றோர் வாக்கு -12.

“Keep thy spirit pure from worldly taint by the repellent   strength of virtue”- Bailey.

“ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் அறவலிமையினால் உயிரைப் புனிதமாக வைத்துக்கொள்.”

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -11.

 

சான்றோர் வாக்கு -11.

“Poets alone are sure of  immortality they are the trust diviners of nature.” –B. Lytton.

”கவிஞர்தான் இயற்கையின் உண்மையான ஞான போதகர்; ஆதலால் அவர் என்றும் நிலையான நித்திய சோதிகளாயுள்ளனர்.”

திங்கள், 11 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -10.

 

சான்றோர் வாக்கு -10.

“ Thy favors are  but like the wind

That kissed everything it meets “----Ayton .    

தான் தோய்ந்த பொருள்களையெல்லாம் இன்புறுத்தி வருகின்ற காற்றைப்போலவே உன்னுடைய அன்பான ஆதரவுகள் அமைந்துள்ளன.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -9

 

சான்றோர் வாக்கு -9

“Heroism is the brilliant triumph of the soul over the flesh+”----Amiel.

உடல் அச்சம் நீங்கி உயர்ந்த உயிரின் வெற்றியாய் ஓங்கியுள்ளது வீரம்.

சனி, 9 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -8.

 

சான்றோர் வாக்கு -8.

A Poet’s soul must contain the perfect shape, wise and just.”__Agustine.

ஒரு கவிஞனுடைய உள்ளம் ஞானம், நீதி, நன்மை முதலிய மேன்மைகளால் அவன் முழு உருவம் அமைந்திருக்க வேண்டும்.

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -7.

 

சான்றோர் வாக்கு -7.

“The king will best govern  his realm who reigneth over his people as a father doth over his children.”---Agesilaces.

தன் பிள்ளைகளைத் தந்தை பேணுவதுபோல் தனது குடிமக்களை இனிது பேணி வருகின்ற அரசன் உலகை  நன்கு ஆளுவான்.

வியாழன், 7 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -6.

 

சான்றோர் வாக்கு -6.

Biography is the most Universally pleasant and Profitable of all reading”__ Carlyle.

ஒருவருடைய வாழ்க்கை வரலாறு எல்லா நூல்களினும் எங்கும் மிகுந்த இன்பமும் பயனும் ஈய வல்லது.

புதன், 6 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -5

 

சான்றோர் வாக்கு -5

“Gold is tested by fire; Man by Gold”__ Chinese.

நெருப்பால் பொன் சோதிக்கப்படுகிறது  ; பொன்னால் மனிதன் சோதிக்கப்படுகிறான்.

திங்கள், 4 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -3

 

சான்றோர் வாக்கு -3

“O Death the poor man’s dearest  friend

The kindest and the best.”—Burns.

 ஓ மரணமே..! நீ ஏழை எளிய மனிதனுடைய அருமையான, இனிய, நல்ல, நண்பன்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -2

 

சான்றோர் வாக்கு -2

’He who would write heroic poems should make his life a heroic poem “- Carlyle.

வீர காவியங்களைப் படைக்கவுள்ள கவிஞன் தன் வாழ்க்கை முழுவதையும் ஒரு வீர காவியமாகச் செய்துகொள்ள வேண்டும்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

பொன்மொழிகள் -1

 

பொன்மொழிகள் -1

“He can be a Poet, prophet, King according to the kind of world he finds himself born into” –Carlyle

ஒருவன் தான் பிறந்த நாட்டின் தன்மைக்கேற்ப அரசனாகவும் ஞானியாகவும் கவிஞனாகவும் வீரனாக விளங்கி நிற்கின்றான்.