திங்கள், 25 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 23. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS.

 

சான்றோர் வாக்கு – 23. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS.

“தமிழி லக்கணம் தமிழி லக்கியம்

எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், புதுவைத்

திருப்புளி சாமி ஐயா செந்தமிழ்

இருப்பே என்னும் பங்காரு பத்தர்

புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு

பெரும்புகழ்ப் பெரியசாமிப் பிள்ளை

என்பவர் ஆவார்.

        இவர்களின் அருளினால்

பதினே ழாண்டும் பற்றா இளையேன்

நாற்பது புலவர் தேர்தலில் முதலாத்

தேர்வு பெற்றேன்.

                      காரைக்காலின்

ஒரு பகுதி யான ‘நிரவியில்’ ஓர் இடம்

ஓர்ஆ சிரியர்தேவைஎன் றதனால்

அந்த இடத்தை அடையக் கருதிப்

புலவர் பல்லோர் போட்டி இட்டனர்

யானும் பதினெட்டாண் டெய்தினேன், ஆயினும்

 

‘இளையன் ஆதலால் அவன் அவ் விடத்தை

அடைதல் ஆகா தென்றனர்’ ஆள்வோர்.

ஆயினும் நானே அதனை அடையச்

சட்டங் காட்டித் தடைகளை நீக்கி

அன்றுஎனை நிரவி ஆசிரியன் ஆக்கினார்

அவர் யார்?.” ………………..தொடரும்…………….

 

Thirupuli swamy Ayya of Pondicherry

Bangaru Pattar, Tamil savant renowned

And Periyaswamy Piilai reputed teacher of teachers,

Taught me Tamil Literature and Grammar.

 

By their kindness keen, before I was seventeen,

In scholastic Tamil Examinations, first I stood among forty.

 

At Niravi, in Karaikal, a  vacancy arose

For a teacher’s post. Competed many for the position

As eighteen years  young then I was, the officers there

Would n’t let me have the job .

……………………………………..contd……….

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக