மலைபடுகடாம் – அரிய செய்தி : 10
பன்றிப் பொறி
விளைபுனம்
நிழத்தலின் கேழல் அஞ்சி
புழைதொறும்
மாட்டிய இருங்கல் அடாஅர்
அரும்பொறி
உடைய ஆறே நள் இருள்
அலரி
விரிந்த விடியல் வைகினிர் கழிமின்
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 193 – 196
கூத்தர்களே நீங்கள் செல்லும் வழியில் --- பன்றி,
முற்றிய தினைப் பயிரையுண்டு குறையச் செய்தலால், அஞ்சிய கானவர், அதனைத் தடுப்பதற்காகச்
சிறிய வழிகள்தோறும் பொருத்தி வைக்கப்பட்டுள்ள பெரிய கற்பொறிகளை உடையன, ஆகையால், இருள்
செறிந்த இராப் பொழுதில் தங்கி, ஞாயிற்றின் கதிர் விரியும் விடியற் பொழுதில் செல்க.
(ஆறு
– வழி ; கேழல் – காட்டுப்பன்றி ; நிழத்தல் – குறைதல் ; புழை – சிறியவழி ; மாட்டிய
– பொருத்தி வைக்கப்பட்ட ; அலரி – ஞாயிறு (ஆகுபெயர்) நள் இருள் – கும்மிருட்டு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக