மலைபடுகடாம் – அரிய செய்தி : 7
நன்னன் நாட்டின்
விளைபொருள்கள்
வானம்
மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட
எல்லாம் பெட்டாங்கு விளைய
அகல்
இரு விசும்பின் ஆஅல் போல
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 95 -100
நிலத்தில் இட்ட விதைகள் யாவும், நிலத்தில் தங்காமல்,
இவ்வாறு விளைய வேண்டும் என்று ஆண்டுள்ளார் விரும்பியவாறே விளையும் வண்ணம் மேகம், மின்னலால்
பிளந்து விருப்பத்தோடு மழையைப் பெய்தது.
இந்நிலத்தில்
விளைந்தவை :- (144 வது அடி வரை)
முசுண்டை, எள், தினை, அவரை, வரகு, மூங்கில் நெல்,
வெண்சிறுகடுகு, இஞ்சி, கவலைக் கிழங்கு. மலைவாழை,
பெருமூங்கில்நெல், நாவல், கூவைக் கிழங்கு, தேமா, ஆசினிப்பலா, பலா, ஐவனம், வெண்ணெல்,
கரும்பு, நெய்தல் ஆகியன.
( ஆஅல்
– ஆரல், கார்த்திகை எனும் நாள் மீன் ; கெளவை – எள்ளின் இளங்காய் ; ஏனல் – தினை ; தோரை
– மூங்கில் நெல் ; துளர் – களை நீக்கும் கருவி ; குளிர் – அரிவாள் / கிளி கடியும் கருவி
; துடவை – தோட்டம் ; காயம் – காழ்ப்பு / உரைப்பு
; உந்தூழ் – பெரு மூங்கில் – அறை – பாறை ;
உயவை – உயவைக் கொடி – கூவை – கூவைக்கிழங்கு ; நூறு – நீறு / துகள் ; அரவை –
விதை ; குடிஞை – பேராந்தை ; கோடியர் – கூத்தர் ; முரஞ்சு – முற்றுதல் ; ஐவனம் – மலைநெல்.
)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக