வியாழன், 23 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 24

மலைபடுகடாம் – அரிய செய்தி : 24
நன்னனைப் புகழ்தல்
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடைக் கடன் இருத்த செம்மலோய் என
 வென்றிப் பல்புகழ் விறலொடு ஏத்தி
            பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 541 – 544
நன்று இது, தீது இது என ஆராயும் பெரிய கொடைஞர்கள் இறந்தார்களாக, உன்னுடைய பெயர், இக்காலத்தில், இவ்வுலகில் மட்டும் நிலைபெறாமல் உலகம் உள்ளவரை யாண்டும் நிற்கும் கொடையாகிய கடமையைச் செய்து முடித்த தலைமை உடையோய் ; வெற்றியால் உண்டாகிய பல புகழ்களை, ஐம்பொறிகளையும் தன் வயமாக்கிக் கொண்ட அவன் வெற்றியோடு புகழ்ந்து, நும் மனத்தில் தோன்றிய நும்முடைய புகழ் மொழிகளை முழுதும் கூறவும்.
( வென்றி பல் புகழ் – வெற்றியால் உண்டாகும் பல புகழ்கள் ; விறல் – புலன் களைத் தன் வயமாக்கும் வெற்றி.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக