மலைபடுகடாம் – அரிய செய்தி : 23
யானை – முத்து
……………………………
யானை
முத்துடை
மருப்பின் முழுவலி மிகுதிரள்
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 518 – 519
குறைவற்ற
வலிமையுடைய யானைகளின் - முத்துக்களைக் கொண்ட
தந்தங்கள். “ முத்துடை மருப்பின் மழகளிறு “ – பதிற்றுப். 32
நூறைக் கிழங்கு
நுகம்
மருள் நூறை – 515 – நுகத்தடியைப் போன்ற மருட்டும் தோற்றமுடைய நூறைக் கிழங்கு.
தேன் கள்
திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல் – 522
- நல்ல மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட முற்றிய
தேனால் ஆக்கிய கள்ளின் தெளிவு.
( கயம்
– (கஜம்) யானை ; எண்கு – கரடி ; தீர்வை – கீரி ; உழுவை – புலி ; நூறை – நூறைக் கிழங்கு ; நாகம் – சுரபுன்னை ; ஆரம்
– சந்தனம் ; அமை – மூங்கில் ; ஓரி – நீல நிறம் ; இறால் – தேனடை .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக