செவ்வாய், 21 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 22

மலைபடுகடாம் – அரிய செய்தி : 22
சேயாறு
   வனைகலந் திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓ இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்குஇன் சேயாற்றின்
யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்
                  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  474 -  477
              குயவனுடைய, வனையும் மட்கலத்தின் சக்கரம் போல, மதகுகள் வழியாகக் குமிழ்த்துச் சுழன்று, விரைந்த செலவினையுடயதாகச் சேயாறு ஒழிவின்றி ஓடிவரும், காண்பவர் விரும்பும் கண்ணுக்கினிய அச்சேயாற்றின் புதுவருவாயை உடைய ஒரு கரையை வழியாகக் கொண்டு நீங்கள் செல்வீராக.
                         சேயாறு – இந்நாளில் செய்யாறு என வழங்கப்படுகிறது.  ஆற்று நீர் வாய்த்தலை வழியாகக் குமிழ்த்து வரும் தோற்றம் குறிக்கப்பட்டுள்ளது. காண்க – காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை – ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே….  ( சிலம்பு. 10: 108 கல்லணைக் குறிப்பு.)
( துனை – விரைவு ; தலை – வாய்த்தலை / மதகு ; வரிக்கும் – ஓடும் ; வயாஅம் – விரும்பும் ; யாணர் – புதுவருவாய்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக