மலைபடுகடாம் – அரிய செய்தி : 19
கண்ணி
தேம்பட
மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல்
அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு
மிடைந்த காமரு கண்ணி
திரங்கு
மரல் நாரில் பொலியச் சூடி
முரம்புகண்
உடைந்த நடவை தண்ணென
உண்டனிர்
ஆடி கொண்டனிர் கழிமின்
பெருங்குன்றூர்ப்
பெருங்கெளசிகனார், மலைபடு. 428 - 433
தேனுண்டாக
மலர்ந்த கடம்பின் மெல்லிய பூங்கொத்தையும், யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரத்தின்
பூவையும், உலர்ந்த மரல் நாரில், தளிர்களோடு நெருங்கக் கட்டிய – விருப்பத்தைத் தரும்
கண்ணியை அழகுபெறச்சூடிப் பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலத்தில்,இடம் விண்ட சிறிய
வழி, மழைபெய்து குளிர்வதால், அந்நீரைக் குடித்தும், குளித்தும் வழிக்கு முகந்துகொண்டும்
செல்வீராக.
( உம்பல்
– யானை ; முரம்பு – பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலம் ; நடவை – சிறுவழி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக