மலைபடுகடாம் – அரிய செய்தி : 20
இனிய உணவு
புளிக் கூழ் :-
செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள்
அரிசி மிதவை சொரிந்த
கவல்விளை
நெல்லின் அவரை அம்புளிங்கூழ்
அற்கு
இடைஉழந்த நும் வருத்தம் வீட …434 - 437
சிவந்த பூக்களையுடைய வேங்கைப்பூவினைப்
போன்ற நிறத்தையுடைய அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி ஆகியவற்றைப் புளி கரைத்த உலையில்
பெய்து ஆக்கிய புளியங் கூழினை நும் வழிநடை வருத்தம் தீரப் பெறுவீர்.
நெய்ச் சோறு : -
பொன்
அறைந்தன்ன நுண்நேர் அரிசி
வெண்
எறிந்து இயற்றிய மாக்கண் அமலை
தண்ணென்
நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர்
சேப்பின் அல்கலும் பெறுகுவீர்… 440 – 443
பொன்னை நறுக்கினார் போன்ற
நுண்ணிய சீரான அரிசியை, வெள்ளை நிறமுடையதாக ஆக்கிய கறித்துண்டுகளைக் கலந்த சோற்றை நெய் விழுதை உள்ளேயிட்டு உண்ணும்படி பெறுகுவீர்.
தினை மாவு : -
விசையம்
கொழித்த பூழி அன்ன
உண்ணுநர்
தடுத்த நுண் இடி நுவணை …
பெருங்குன்றூர்ப்
பெருங்கெளசிகனார், மலைபடு. 444 – 445
உண்டவரை வேறு ஒன்றையும் நுகரவொட்டாமல்
தடுக்கும், இடித்த நுண்ணிய இனிய தினை மாவுடன்
வெல்லத்தைப் பொடியாக்கிப் பிண்டித்த தினை மாவும் பெறுகுவீர்.
( கவல்
– மேட்டு நிலம் ; அகலுள் – அகன்ற ஊர் ; குரம்பை – குடில் ; அமலை – சோற்றுத் திரள்
; இழுது – நெய் விழுது ; விசையம் – வெல்லம் ; பூழி – பொடி ; நுவணை - இடித்த தினைமாவு .)
புளிக்கூழ் இதுவரை கேள்விப்பட்டதில்லை. தற்போது அறிந்தேன்.நன்றி.
பதிலளிநீக்கு