மலைபடுகடாம் – அரிய செய்தி : 18
தோல் படுக்கை
துய்ம்
மயிர் அடக்கிய சேக்கை அன்ன
மெய்
உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீத்
துணையாகச் சேந்தனிர் கழிமின்
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 418 - 420
கோவலர்கள்,
மெல்லிய தலைமயிரினையடைய சேணம் இட்ட படுக்கையைப் போல ஆடுகளின் தோலை உரித்து, ஒன்றாகச்
சேர்த்துத் தைத்து, வாரால் இறுக்கிக் கட்டப்பட்ட தோல் படுக்கையைப் பயன்படுத்துவர்
; இரவில் கொடிய விலங்குகள் வாராதபடி தீயை மூட்டுவர்
; நீவிர் அவ்விடத்துத் தங்கிச் செல்வீராக.
( சேணம்
– படுக்கை ; அதள் – தோள் ; துய் – மெல்லிய
.)
நன்று
பதிலளிநீக்குநன்று
பதிலளிநீக்குரசித்தேன். நன்றி. முகநூல் பக்கத்தில் தங்களது நூல்களின் முகப்பட்டைகளைக் கண்டேன். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு