மலைபடுகடாம் – அரிய செய்தி : 8
கானவர் – காவு மரம்
தேனினர்
கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்
சிறுகண்
பன்றிப் பழுதுளி போக்கி
பொருது
தொலை யானைக் கோடு சீர் ஆக
தூவொடு
மலிந்த காய கானவர்
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.152 – 155
கானவர்
தம்முள் பொருதுபட்ட யானையின் கொம்புகளைக் காவு மரமாகக் ( காவடியின் தண்டு போல்) கொண்டு
தாம் கொண்டுவந்த தேன், கிழங்கு, ஊன், பன்றியின் தசை, போன்றவற்றைப் பனை ஓலையால் செய்யப்பட்ட வட்டில்களில் இட்டு, அக் காவு மரத்தில் தொங்கவிட்டுச் சுமந்து வருவர்.
( வட்டி
– பனையோலைப் பெட்டி ; தூ – உணவு / தசை ; பதம் – உணவு ; காய கானவர் – காவடியாகச் சுமந்து
வந்த கானவர்.)
ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்கு