சனி, 11 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 12

மலைபடுகடாம் – அரிய செய்தி : 12
கவண் கல்
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லெனக்
கருவிரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர்செகு மரபின் கூற்றத்தன்ன
வரும்விசை தவிராது மரம் மறையாக் கழிமின்
                  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  206 – 210
புனத்தில் விளைந்த தினைக் கதிர்களை உண்ண வரும் யானைகளை, மலை வாழ் மக்கள், பரண் மீது நின்று கவண் கல் எறிந்து விரட்டுவர். அக்கற்கள், மரங்களில் குட்டிகளுடன் தாவித் திரியும் குரங்குகளை அஞ்சி ஓடச் செய்யும் . வழிச் செல்வார்க்குக் கவண் கற்களால் ஏதம் விளைதலும் கூடும் ஆதலின்  மரங்களில் மறைந்து செல்க எனக் கூத்தன் உணர்த்தினான்.
 ( இதணம் – பரண் ;  இறும்பு – குறுங்காடு ; ஊகம் – குரங்கு ;  கழை – மூங்கில் கோல் ; தளர்க்கும் – கெடுக்கும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக