ஞாயிறு, 12 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 13

மலைபடுகடாம் – அரிய செய்தி : 13
கடத்தற்கு அரிய வழி
கயம் கண்டன்ன அகன்பை அம்கண்
மைந்துமலி சினத்த களிறு மதன் அழிக்கும்
துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து  அமைகல்லாப் பழனும் ஊழ் இறந்து
பெரும் பயம் கழியினும் மாந்தர் துன்னார்
இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்
இடனும் வலனும் நினையினிர் நோக்கி
குறி அறிந்து அவைஅவை குறுகாது கழிமின்
         பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  259 – 267
வலிமிகும் சினம் கொண்ட யானையின் வலிமையைக் கெடுத்து அதனை விழுங்கும் ஆற்றலுடைய அகன்ற படத்தினையும், அழகிய கண்ணினையும் விழுந்து கிடக்கும் பெருமரங்களைப் போன்ற தோற்றத்தையும் கொண்ட பெரும் பாம்பு கிடக்கும் வழியை விலகிச் செல்க,  தாம் நிற்கும் நிலத்தைக்கடந்து தொலை தூரத்திலும் மணம் வீசும்  பூவினையும் நுகர்ந்தவர், மறந்து உயிர் வாழ இயலாத பழங்களையும் மானுடர் அணுகார், ஆதலின் நீண்ட காம்புடைய அப்பூக்களையும் பழத்தையும்  குளத்தைக் கண்டாற் போன்ற குளிர்ச்சியுடைய பெரிய மரங்கள் மிகுந்த சோலைகளையும், யான் கூறியதனை நினைத்து, அவற்றின் குறிகளை அறிந்து, இடத்தினும் வலத்தினும் பார்த்து அவற்றை அணுகாமல் செல்வீராக.
(  கயம் – குளம் ; மைந்து – வலிமை ; மதன் – வலிமை ;  துஞ்சுதல் – தூங்குதல் / விழுந்து கிடத்தல் ; மாசுணம் – பெரும் பாம்பு ; முரஞ்சிய – முற்றிய ; கோளி – பூவாது காய்க்கும் மரம். ஆலமரம்) (கோளி ஆலத்துக் கொழு நிழல் – புறம் . 58…. )
 மாசுணம் –
களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம் – நற்.14 ; வெண்கோட்டு யானை விளிபடத் , துழாவும் அகல் வாய் பாந்தள் ;அகம் . – 68 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக