மலைபடுகடாம் – அரிய செய்தி : 3
பைதீர் பாணர்
அமைவரப்
பண்ணி அருள் நெறி திரியாது
இசைபெறு
திருவின் வேந்தவை ஏற்ப
துறை
பல முற்றிய பைதீர் பாணரொடு
உயர்ந்து
ஓங்கு பெருமலை ஊறு இன்று ஏறலின் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.
38 – 41
பேரியாழினைத் தனக்குரிய நூல்களில்
கூறிய இலக்கண மரபுகளில் பிறழாதவாறு இசைப்பதற்கு
ஏற்ற வகையில் ஆயத்தம் செய்துகொண்டு, இசையை எக்காலத்தும் கேட்கும் செல்வத்தையுடைய அரசர்களின்
அவைக் களத்தில் அவர்கள் செவிகளால் துய்த்து மகிழும் வண்ணம் தாம் இசைக்கும் துறைகள் பலவற்றையும், அறிவு முதிர்ச்சியுற்ற
இளமை நீங்கிய பாணர்கள் இசைத்து முடிப்பர்.
( அருள்
நெறி – யாழ் நூலில் கூறப்பட்ட நெறி ; பண்ணி – சமைத்து / திருத்தி ; துறைபல - வலிவு, மெலிவு, சமன் என்ற மூவிடத்தும் ஒவ்வொன்றில்
ஏழு சுர முறை முடித்துப் பாடப்பெறும் 21 பாடல் துறைகள். ; பைதீர் பாணர் - கல்வி, (இளமையற்ற – இசையில் தொடக்க நிலை முடித்து
முதிர்ச்சி) புலமைத் திறத்தால் முற்றிய பாணர்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக