வியாழன், 16 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 17

மலைபடுகடாம் – அரிய செய்தி : 17
புல் முடிந்து போதல்
பண்டு நற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்
                      பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 392 – 393
  இப்பொழுது நீங்கள் செல்லும் வழி, நீங்கள் இதற்குமுன் சென்று அறியாததாகும் அவ்வழியில் செல்லும் புதியவர்கள் நீங்கள் எனவே, உங்களுக்குப்  பின் வருகின்றவர்களும் வழி அறிந்துகொள்வதற்குப் பல வழிகளும் கூடும் சந்தியைக் கையால் துடைத்து, அடையாளமாக ஊகம் புல்லை முடிந்திட்டு வைப்பீராக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக