செவ்வாய், 14 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 15

மலைபடுகடாம் – அரிய செய்தி : 15
பறை முழக்கம்
1.   திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோற் சிறுபறை கறங்கக் கல்லென
 வான் தோய் மீமிசை அயரும் குரவ
 319 – 322
நாட்காலையில் கள் குடித்த குறவர்கள், தம் மனைவியருடன் கூடி, மான் தோல் போர்த்த சிறு பறையைக் கல் என்னும் ஓசை உண்டாகுமாறு அடித்து, வானைத் தீண்டும் உச்சி மலையில் ஆடும் குரவைக் கூத்தின் ஆரவாரமும்…
2.   தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறியும் …….
            பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 342 - 344
 தினையைக் குத்துகின்ற மகளிரின் இசைமிகும் வள்ளைப்பாட்டும், சேம்பையும் மஞ்சளையும் விதைத்து, அவை வளர்ந்தபின், பன்றிகள் அவற்றின் கிழங்குகளை அகழாமல் பாதுகாப்பவர், பன்றிகளை ஓட்டுதற்கு அடிக்கும் பறை ஓசையும்…  இவ்வோசைகளால் மலையிடத்துத் தோன்றும் எதிரொலியும் கேட்கும்.
( பணவை – பரண் ; விடர் – முழை ; முறி – தளிர் ; மால்பு – கண் ஏணி , கணுக்களில் அடிவைத்து ஏறுதல் ;  குரவை – ஆண், பெண் இருபாலரும் ஆடுவது ; குறும்பு – பகைவர் தங்கும் சிற்றரண்; இயவு – வழி ; காழ் – விதை ; ஏத்தம் – ஓசை ; குறுதல் – குத்துதல் ; அவல் – பள்ளம் ; அலகு – எண்; கடாம் – மதநீர் , ஆகுபெயராய் ஓசையை உணர்த்திற்று.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக