திருக்குறள்
– சிறப்புரை : 754
அறன்ஈனும் இன்பமும்
ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த
பொருள். --- ௭௫௪
பிறருக்குத் தீதின்றி அறவழி அறிந்து ஈட்டிய பொருள் ஒருவனுக்கு ஒழுக்கத்தின் மேன்மையையும் அதனால்
விளையும் இன்பத்தையும் என்றும் நல்கும்.
“……..
அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும்
பெரும நின் செல்வம்
ஆற்றாமையே
நிற் போற்றாமையே” –புறநானூறு.
வேந்தே…! நீ வழங்கும் செல்வம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் ஆற்றுதற்கு
உதவும்; அவற்றை ஆற்ற இயலாதார் நின்னைப் போற்றாதாரே.
…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக