திருக்குறள் – சிறப்புரை : 755
அருளொடும் அன்பொடும்
வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள
விடல்.
– ௭௫௫
நாட்டை ஆளும் அரசன் தன் குடிமக்களிடத்து அருளொடும் ; குடிமக்கள் அரசன்பால்
அன்பொடும் பொருந்தி வாராத பொருளாக்கத்தை அரசன் தன்னைச் சேரவிடாது நீக்கிவிட வேண்டும்.
“பரிவுதப
எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை
புக்க புலம் போலத்
தானும்
உண்ணான் உலகமும் கெடுமே.” –புறநானூறு.
அரசன், குடிமக்களை வருத்தி மிகுதியான வரி வாங்குவானாயின் யானை புகுந்த
நிலம்போல, நாடு அழிய, அரசனும் அழிவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக