திருக்குறள்-
சிறப்புரை : 773
பேராண்மை என்ப
தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன்
எஃகு.---- ௭௭௩
பகைவரோடு அஞ்சாது எதிர்நின்று போராடுவதைப் பேராண்மை என்று கூறுவர் ; பகைவர்க்கு
ஏதேனும் துன்பம் நேரின் அதற்காக இரக்கம் கொண்டு, அப்பகைவர்க்குத் தீங்கு செய்யாமல்
உதவி புரியும், அந்தப் பேராண்மை மிக்க வலிமை உடையது என்று கூறுவர் சான்றோர்.
“நீர்த்தகவு
இல்லார் நிரம்பாமைத் தம்நலியின்
கூர்த்து
அவரைத் தாம்நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு.”---பழமொழி.
நற்குணமும் நல்லறிவும் இல்லார், தம்மை வருத்தினராயின் அங்ஙனமே தாமும்
அவரை வருத்துதல் சான்றோர் கொள்கை இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக