திருக்குறள்
– சிறப்புரை : 760
ஒண்பொருள் காழ்ப்ப
இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும்
ஒருங்கு. ---- ௭௬0
அறம், பொருள், இன்பம் என்ற உறுதிப்பொருள் மூன்றனுள் சிறந்ததாகிய பொருளை
வேண்டுமளவு ஈட்டியவர்க்கு, அறம், இன்பம் என்ற ஏனைய இரண்டும் ஒருசேர எளிதில் கைகூடும்.
“சிறப்புடை
மரபின் பொருளும் இன்பமும்
அறத்து
வழிப்படூஉம் தோற்றம்…” –புறநானூறு.
சிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக