திருக்குறள்-
சிறப்புரை : 779
இழைத்தது இகவாமைச்
சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்
பவர்.
--- ௭௭௯
பகையை வெல்வேன் என்று சூளுரைத்துப் போர் உடற்றி உயிர் துறக்கும் வீரரை,
அவர் கூறியது தப்பியது என்று இகழ்ந்துரைப்பார் யார் உளர்?.
ஓங்கிய
சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி
மருதன் தலைவனாக
உலகமொடு
நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர்
பாடாது வரைக என் நிலவரை.” –புறநானூறு.
பகையை அழித்து, என் மக்களை நான் காக்காவிட்டால், சிறந்த தலைமையும் மேம்பட்ட
புலமையும் உடைய மாங்குடி மருதன் தலைவனாக, உலகத்தில் வாழும் சான்றாண்மை மிக்க சிறப்பினை
உடைய புலவர்கள் எவரும் என் நிலத்தைப் பாடாது நீங்கும் நிலையை அடைவேனாக. –தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக