திருக்குறள்-
சிறப்புரை : 778
உறினுயிர் அஞ்சா
மறவர் இறைவன்
செறினும்சீர்
குன்றல் இலர்.--- ௭௭௮
(உறினுயிர் – உறின் உயிர்.)
உயிருக்கு அஞ்சாது போரினை விரும்பி ஏற்கும் மறவர்கள் தம் அரசன் சிலபோது சினந்துகொண்டாலும் அவர்கள் தம்
வீரத்தில் ஒருபோதும் குறைதல் கொள்ளார்.
“
செல்லும் தேஎத்துப் பெயர் மருங்கு அறிமார்
க;ல்
எறிந்து எழுதிய நல்அரை மராஅத்த
கடவுள்
ஓங்கிய காடு…” ---மலைபடுகடாம்.
கூத்தர்களே..! நீங்கள் போகும் நாட்டில் போரிட்டு இறந்தவன் இவன் என்பதை
அறிந்து கொள்வதற்கு ஏற்பப் பெயர் எழுதிய கல், நல்ல அடிமரத்தையுடைய மரா மரங்களின் நிழலில்
நடப்பட்டிருக்கும் அத்தகைய நடுகல்லாகிய கடவுள் நிறைந்த காடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக