78.
படைச் செருக்கு
திருக்குறள்-
சிறப்புரை : 771
என்னைமுன் நில்லன்மின்
தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.—௭௭௧
பகைவர்களே..! என் தலைவனை எதிர்நின்று போர்புரிய நிற்காதீர்கள்; இதற்கு
முன்பு என் தலைவனை எதிர்த்து உயிரிழந்து நடுகல்லாய் நிற்பவர் பலராவர்.
“
வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇதன்
கால்முளை
மூங்கில் கவர் கிளை போல
உய்தல்
யாவது நின் உடற்றியோரே.” –பதிற்றுப்பத்து.
நீண்ட மேகத்தின் முழக்கத்தைப்போல, இளைய ஆண் யானை வலிமை பெருகித் தன் காலால்
அகப்படுத்தப்பட்ட முளைத்த மூங்கிலினது கிளையைப்போல, உன் (குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை)
பகைவர் அழிந்து போவார்களே அன்றித் தப்பித்துக்கொள்ள இயலாது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக