திருக்குறள்
– சிறப்புரை : 767
தார்தாங்கிச்
செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும்
தன்மை அறிந்து. --- ௭௬௭
பகைவரால் தொடுக்கப்பட்ட போரின் வலிமையையும் சூழ்ச்சிகளையும் அறிந்துகொண்டு
அதற்கேற்றார்போல் போர்மேற்செல்லும் வழிமுறைகளை வகுத்துக்கொண்டு பகைவர் படையை எதிர்கொள்ள
முனைவதே சிறந்த படையாகும்.
”நசைதர வந்தோர்
நசை பிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர்
பலர்கொல்..”
--புறநானூறு.
வேந்தே..! ஆவலால் வெற்றிபெற விரும்பிவந்த பகைவர்,நின்னை
எதிர்த்து வெற்றிபெற முடியாமல் இகழச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக