திருக்குறள்
-சிறப்புரை
:1123
கருமணியிற்
பாவாய்நீ
போதாய் யாம்
வீழும்
திருநுதற்கு
இல்லை
இடம். ----- ௧௧ ௨௩
என் கண்ணின் கருமணியில் உறைந்திருக்கும் பாவையே…! நீ அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடு ;யாம் விரும்பும் அழகிய நெற்றியை உடைய எம் காதலி இருக்க வேறு இடமில்லை.
“துறைநணி யிருந்த பாக்கமும்
முறைநனி
இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கங் காணா ஊங்கே.” -----நற்றிணை.
அகன்ற அல்குலையும் மெல்லியதாய்
அமைந்த இடையையும் உடைய மீன்பிடிக்கின்ற பரதவரின் இளமகளின், மான்போலும் ஒன்றோடொன்று தொழிலின் மாறுபட்ட
பார்வையைக் காணப் பெறாதமுன்….. துறைக்கு அணித்தாயிருந்த
பாக்கம் மிகவும் இனிமை உடையதாயிருந்தது ; ஆனால் இன்று, பரதவர் மகளின் நோக்கம்
காணப்பெற்றமையால் , பாக்கம் அழகிழந்ததாயிற்று.