வியாழன், 21 மே, 2020


தன்னேரிலாத தமிழ் - 68

“” குடிகொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால் கொளலும் மாண்பே குடிஓம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.” ---  குமரகுருபர ர், நீதிநெறி விளக்கம்.

தன் குடிமக்களைப் பெரிதும் வருத்தி வரி வாங்கும் வேந்தனுக்குக் கன்றினை உடைய பசுவின் மடியை வருத்திக் கன்றுக்குப் பால் விடாமல் கறத்தலும் நல்ல செயலே  (iஇதைவிட, வருத்தி வரி வாங்கல் கொடிது.)   அப்படி வருத்தி வரி வாங்கினாலும் அவனிடம் செல்வம் சேர்ந்திருப்பது இல்லை , மாறாகக் குடிமக்களை நல்ல முறையில் பாதுகாத்து முறையாக வரி வாங்கும் வேந்தனுக்கு, வெள்ளத்தைவிடப் பல மடங்கு பெருமை பொருந்திய செல்வம் சேரும்.

1 கருத்து: