தன்னேரிலாத தமிழ் –295.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. குறள். 752
“ காவேரி
ஓரம் கவிசொன்ன காதல்
கதைசொல்லி நான் பாடவா –உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா –அந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா –பொங்கும்
விழி நீரை அணை போடவா (காவேரி)
பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் –அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் – ஏழை
விதியோடு விளையாடுவார் – அன்பை
மலிவாக எடைபோடுவார் என்ற
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா –பொங்கும்
விழி நீரை அணை போடவா (காவேரி)
அழியாத காதல் நிலையானதென்றே
அழகான கவி பாடுவார் –வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனமாறி உறவாடுவார்- கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் –தன்னை
எளிதாக விலை பேசுவார் என்ற
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா –பொங்கும்
விழி நீரை அணை போடவா
மண வாழ்வு மலராத மலராகுமா
மனதாசை விளையாத பயிராகுமா
உருவான உயர் அன்பு பறிபோகுமா
உயிர் வாழ்வு புவிமீது சுமையாகுமா, சுமையாகுமா?
---கவிஞர்கே.டி.சந்தானம், படம்: ஆடிப்பெருக்கு, 1962.