திருக்குறள் -சிறப்புரை :805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.--- ௮0௫
நாம் வருந்தும் அளவுக்கு நண்பர் ஏதேனும் செய்து விட்டாராயின், அவரைக்
கடிந்துகொள்ளாது அறியாமையினாலோ அல்லது நட்புரிமையாலோ அவ்வாறு செய்தார் எனக் கொள்ள வேண்டும்.
“ நட்டார்ப் புறங்கூறான்
வாழ்தல் நனி இனிதே.” –இனியவை நாற்பது.
நண்பரைப்பற்றிப் புறங்கூறாது வாழ்தல் மிகவும் இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக