திருக்குறள் -சிறப்புரை :810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.--- ௮௧0
, பலகாலம் பழகிய நண்பர்கள் தவறு
செய்தபோதும் அவர்களிடத்தில்,தாம் கொண்டிருந்த நட்பினின்றும் சிறிதும் மாறாத பண்பிற்
சிறந்தோரைப் பகைவரும் விரும்புவர்.
“கடை ஆயார் நட்பிற் கமுகு
அனையர் ஏனை
இடை ஆயார் தெங்கின் அனையர்
தலை ஆயார்
எண்ணரும் பெண்ணை போன்று
இட்டஞான்று இட்டதே
தொன்மை உடையார் நட்பு.
–நாலடியார்.
கீழ்த்தரமானவர்கள் பாக்கு மரத்தை ஒத்தவர் ; நடுத்தரமானவர்கள் தென்னை மரத்தை
ஒத்தவர் ; முதல் தரமானவர்கள் எண்ணுதற்கு அருமையான பனை மரத்தை ஒத்தவர். பண்பிற் சிறந்த
பழைமை உடையார் நட்புச் செய்தகாலந்தொட்டே உயிர்ப்புடன் தொடர்வதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக