ஞாயிறு, 4 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :807


திருக்குறள் -சிறப்புரை :807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். --- ௮0௭
வழிவழிவந்த  அன்பிற்சிறந்த நட்பினையுடையவர்கள், நண்பர்கள் தமக்கு அழிவுதரும் செயல்களைச் செய்யினும் அவர்களிடம் தாம் கொண்டுள்ள அன்பிலிருந்து ஒருபோதும் நீங்க மாட்டார்கள்.
“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்.” ---நற்றிணை.
நட்பைப் போற்றும் நற்பண்பு உடையார், நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் தயங்காது உண்டு, நட்பைப் பேணுவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக