திங்கள், 19 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :821


83. கூடாநட்பு
திருக்குறள் -சிறப்புரை :821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.—௮௨௧
உள்ளத்தால் ஒன்றாது தமக்கு வேறுஒருவர் நட்பு கிடைக்கும்வரை நட்புக்கொள்வாரைத் தக்க நேரம்பார்த்துத் தூக்கி எறிதற்குப் பயன்படும் பட்டடை ஆகும்.
(பட்டடை – பட்டறை = அடைகல்)
1.  கூடா நட்பு கேடாய் முடியும்.
2.  கூடாதவரோடு கூடாதே கூடங்க(ள்) மாடங்க(ள்) ஏறாதே.பழமொழிகள்.
”பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ்….”—தொல்காப்பியம். 1336.

                     பழமொழிகள் – கருத்தாழமும் சொற்கட்டும் கொண்டவை. கால வெள்ளத்தைக் கடந்து வாழும் தொன்மை இலக்கியம். தொல்காப்பியர் ஏழு வகை இலக்கியங்களுள் ஒன்றாக இதனை ”முதுசொல்”  (பழமொழி) என்று குறிப்பிடுவார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக