புதன், 21 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :823


திருக்குறள் -சிறப்புரை :823
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.---- ௮௨௩
பல நல்ல நூல்களைக்கற்றுத் தேர்ந்திருந்தபோதும் அவற்றின் பயனாக மனப்பக்குவம் பெற்றுத் திகழ்தல் நற்பண்பு இல்லாதவர்களுக்கு இல்லை.
“ அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
 செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்”—நாலடியார்.
குற்றமற்றவர்கள் அறநெறியைப்பற்றி உரைக்கும் பொழுது நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக