புதன், 14 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :816


திருக்குறள் -சிறப்புரை :816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.--- ௮௧௬
அறிவில்லாதவரின் மிகச்சிறந்த நட்பை விட அறிவுடையாரின் பகைமை கோடி மடங்கு சிறப்பினைத்தரும்.
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராங்கு
மாற்றுமைக் கொண்டவழி..” ---கலித்தொகை.
தமக்கு வருகின்ற இறப்பையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழியிலே செல்லாமல்; அவ்வழியிலிருந்து மாறுபட்ட நல்லவர் வழியை உனக்கு வழியாகக் கொள்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக