82. தீ நட்பு
திருக்குறள் -சிறப்புரை :811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
குடித்தலில் கொண்டவேட்கை போல அன்பொழுகப் பழகினாலும்
பண்பு இல்லாதவருடைய நட்பு, வளர்வதைவிடத் தேய்ந்து போதல் இனிமையுடைது.
“ இனநலம் நன்கு உடையராயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்..” –பழமொழி
கீழ் மக்கள், இனத்தின் நன்மை நன்கு உடையவராயினும்
மனத்தால் நல்லவராக இருக்கமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக