செவ்வாய், 6 மார்ச், 2018


திருக்குறள் -சிறப்புரை :809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. --- ௮0௯
பலகாலம் நட்பறாது பழகிய நண்பர்களிடத்துக் குற்றம், குறைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் அவர்தம் நட்பினைப் போற்றுகின்றவரை இவ்வுலகம் பாராட்டும்.
“பிழை பொறுத்தல் பெருமை, சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்.---சிறுபஞ்சமூலம்.
பிறர் செய்த தவறைப் பொறுத்தல் பெருமை;   பிறர் செய்த தீமையை எண்ணிக்கொண்டிருத்தல் சிறுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக