திருக்குறள் -சிறப்புரை :825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று
அன்று.--- ௮௨௫
உள்ளத்தால் ஒன்றிப் பழகாதவரை அவர் கூறும் யாதொரு சொல்லினாலும் தேர்ந்து
தெளிதல் கூடாது.
”………….. ………… …………. வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும்
தேயுமே
தானே சிறியார் தொடர்பு..”
–நாலடியார்.
சிற்றறிவு உடையார்தம் நட்பு வானில் தவழும் முழுநிலவு நாள்தோறும் தேய்ந்து
குறையுமாறு போலத் தானே குறைந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக