வெள்ளி, 16 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :818


திருக்குறள் -சிறப்புரை :818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.--- ௮௧௮
தம்மால் செய்யமுடியும் ஒரு செயலைச் செய்ய இயலாதுபோல நடிப்பவர் நட்பினை அவர் அறிய ஏதும் சொல்லாமல் அவர்தம் நட்பினைக் கைவிட்டு விடல் வேண்டும்.
”செல்வம் பெரிதுடையார் ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடையார்.” –நாலடியார்
கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் உடையவராய் இருந்தாலும் அறிவுள்ளவர்கள் அவர்களுடன் நட்புக்கொள்ள மாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக