சனி, 3 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :806


திருக்குறள் -சிறப்புரை :806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. --- ௮0௬
 நட்பின் எல்லையறிந்து ஒழுகும் தன்மையுடையார்  தம்முடன் பழைமையான நட்புரிமை கொண்டவரால் துன்பம் நேரிடினும் அவரது நட்பினைக் கைவிடமாட்டார்கள்.
“ கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும்.—நான்மணிக்கடிகை.
பிறர் செய்த தீமைகளை மறத்தல் வேண்டும்; பிறர் செய்த நன்மைகளைப் பெரிதும் நினைத்தல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக