வியாழன், 1 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :804


திருக்குறள் -சிறப்புரை :804
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.—௮0௪
தாம் செய்ய விரும்பிய ஒரு செயலைத் தம்மைக் கேட்காமலேயே, உரிமையுடன் நண்பர் செய்து முடிப்பாராயின், அத்தகைய நட்புரிமையை விரும்பி ஏற்பர்.
“ஒருவர் பொறை இருவர் நட்பு.” –பழமொழி.
ஒருவர் பொறுமை இருவர்க்கும் நட்பாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக