புதன், 28 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :830


திருக்குறள் -சிறப்புரை :830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.--- ௮௩0
தமக்குப் பகையானவர் நட்பு நாடி வருவாரானால் அவரோடு மனத்தால் நட்புக்கொள்ளாது முகத்தால் நட்புக்கொண்டு காலம் வரும்போது அவர்தம் நட்பை முற்றாகக் கைவிடல் வேண்டும்.
“உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரப்புணருமாம் இன்பம் –புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.” –நாலடியார்.
நம்மை அறிந்துகொள்ள அறிந்திருக்கின்ற அறிவு உள்ளவர்களை நட்புக்கொண்டால் இன்பம் உண்டாகும் ; அறிந்துகொள்ளும் அறிவற்றவர்களை நட்பாகக்கொண்டால் அவரைவிட்டு நீங்க. துன்பம் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக