திருக்குறள் -சிறப்புரை :828
தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. --- ௮௨௮
நல்லவர்போல் நடிக்கும் பகைவர்தம் கூப்பிய கைகளுக்குள்ளும் கொலைக் கருவி
மறைந்திருக்கும்; அவ்வாறே பகைவர் அழுது விடும் கண்ணீரும் அத்தன்மைத்தே. நண்பர் இவர்
; பகைவர் இவரென முகக்குறிப்பால் அறிக.
“வெறுமின் வினை தீயார் கேண்மை
எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார் வாய்ச்
சொல்.”---நாலடியார்.
தீவினை செய்வாருடைய நட்பினை வெறுத்து ஒதுக்குங்கள்; பெரியோர் வாய்ச்சொற்களை
ஏற்றுப் போற்றுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக