செவ்வாய், 27 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :829


திருக்குறள் -சிறப்புரை :829
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.—௮௨௯
(தம் எள்ளுவாரை; சா புல்லல் பாற்று)
பகைமையை மறைத்து மிகவும் அன்பு கொண்டார் போல நடித்துத் தம்மை இகழும் பகைவரைத் தாமும் அவர்போலவே அவர் மகிழும் வண்ணம் அன்பு பாராட்டி மனத்தால் அவர் மீது கொண்ட நட்பு நாளும் கெட்டு  ஒழியுமாறு நடந்து கொள்வதே நன்று.
நட்பை முறித்துக்கொள்வதிலும் நாகரிகம் பேணவேண்டும்.
“ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல
 மரூஉச் செய்தியார் மாட்டும் தங்கு மனத்தர்
 விராஅய்ச் செய்யாமை நன்று.” ---நாலடியார்
மன உறுதி உடையவர்கள் நன்மைகள் செய்யும் மனம் உடையாருடன் சிலகாலம் சேர்ந்திருப்பதும் சில காலம் நீங்கி இருப்பதும்  செய்வார்களோ ? அப்படி நடந்து கொள்வதைவிட அவர்களிடம் நட்புக்கொள்ளாமல் விலகி இருப்பதே நன்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக