84.
பேதைமை
திருக்குறள் -சிறப்புரை :831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.--- ௮௩௧
பேதைமை என்பது யாதென்றால் தனக்குக் கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம்
தருவனவற்றைக் கைநழுவ விடுதலாகும்.
(பேதைமை – அறியாமை – கூறுகெட்டவன்)
“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.”
---குறள்.428.
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமை ; அஞ்சத்தக்கதைக் கண்டு
அஞ்சுவதே அறிவுடையார் செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக