வியாழன், 22 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :824


திருக்குறள் -சிறப்புரை :824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.--- ௮௨௪
கண்டபொழுது முகம் மலர இனிமையாகப் பேசினும் மனத்தால் வஞ்சகத் தன்மைகொண்டாரை அறிந்து அச்சப்பட வேண்டும்.
“ அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
  கடுத்தது காட்டும் முகம்.” –குறள்.—706.
தன்னை அடுத்துள்ள பொருளைத் தன்னுள் காட்டும் பளிங்கு போல ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக