சனி, 24 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :826


திருக்குறள் -சிறப்புரை :826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். --- ௮௨௬
நண்பர்களைப்போல் நல்லவை எடுத்துக்கூறினாலும் உள்ளத்தால் ஒன்றாத வஞ்சகர்தம் வாய்ச்சொல்லின்உண்மைத் தன்மை உடனடியாக உணரப்படும்.
“பேதையோடு யாதும் உரையற்க – பேதை
உரைப்பிற் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.” –நாலடியார்.
பேதையானவன் சொல்லவேண்டியவிடத்துச் சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லாமல்  மாறுபட்டுச் சொல்வான் ஆதலால் கூடுமானவரை அவனிடமிருந்து தப்பித்து நீங்குதலே நன்று.


2 கருத்துகள்:

  1. தமிழ் வலைதிரட்டிகளும் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது மற்றும் பதிவுகளை சுலபமாக இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    http://thiratti.tamilblogs.in/

    பதிலளிநீக்கு
  2. நன்றி எப்படி இணைப்பது என்று தெரியவில்லை.. உதவியாளர் வந்தவுடன் முயற்சிசெய்கிறேன்.

    பதிலளிநீக்கு